கதிர் நடிக்கும் 'யூகி' படத்தின் அப்டேட்..!
நடிகர் கதிர் நடித்துள்ள 'யூகி' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் 'யூகி'. மேலும் இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ்-மலையாளம் உள்ளிட்ட இருமொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.