கார்த்தியின் 'விருமன்' திரைப்படம் வெளியானது..! ரசிகர்கள் கொண்டாட்டம்

'விருமன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது;

Update: 2022-08-12 03:06 GMT

சென்னை,

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார்.

விருமன் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பல்வேறு திரையரங்குகளிலும் காலை முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து படம் வெளியான நிலையில், ரசிகர்கள் ஆடி, பாடி படத்தை ரசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்