கணவர், மாமனார் மீது நடிகை போலீசில் புகார்

கணவரும், மாமனாரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி நடிகை சைத்ரா ஹல்லிகேரி போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-05-26 08:47 GMT

பிரபல கன்னட நடிகை சைத்ரா ஹல்லிகேரி. இவர் குரு சிஷ்யரு, ஶ்ரீதனம்மா தேவி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2006-ல் பாலாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் மற்றும் மாமனார் மீது மைசூரு ஜெயலட்சுமி புரம் போலீசில் சைத்ரா ஹல்லிகேரி மோசடி புகார் அளித்துள்ளார். தனது கையெழுத்தை போலியாக போட்டு தனது வங்கி கணக்கு மூலம் இருவரும் நகை கடன் வாங்கி இருப்பதாகவும், இதற்கு வங்கி மேலாளரும் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் புகாரில் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது கணவரும், மாமனாரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே கணவர் தன்னை தாக்கியதாக போலீசில் சைத்ரா ஹல்லிகேரி புகார் அளித்து பின்னர் அதை வாபஸ் பெற்று இருந்தார். இந்த நிலையில் மீண்டும் மோசடி புகார் அளித்துள்ளார். போலீசார் 468, 406, 409, 420, 506, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்