'இந்தியன்2' படக்குழுவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை மாவட்ட உரிமைகள் நீதிமன்றம் இந்தியன்-2 படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-07-10 10:55 GMT

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 12- ம் தேதி வெளியாக உள்ளது. இந்தசூழலில், இந்தியன்-2 திரைப்படத்திற்கு தடை கோரி வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குனர் ஷங்கர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என கோரினார். அதற்கு நீதிபதி, 'இந்தியன் 2' படம் வருகிற 12-ந்தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், விரைவாக பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

அதனுடன், நீதியின் நலன் கருதி இந்த வழக்கில் தயாரிப்பாளர் சுபாஷ்கரண், நடிகர் கமல் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் கமல் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட உரிமைகள் நீதிமன்றம் இந்தியன்-2 படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்