சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.;

Update: 2022-09-02 16:59 GMT

சென்னை,

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரகுமான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ஏஞ்சலினா ஆபிரகாம், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்