'தளபதி' படத்தில் நடிக்க கஷ்டப்பட்ட ரஜினி...உதவிய கமல்ஹாசன்

'தளபதி' படத்தில் நடிக்க கஷ்டப்பட்டதாக ரஜினிகாந்த் கூறினார்.;

Update: 2024-08-20 09:53 GMT

சென்னை,

இப்போது மிகப்பெரிய நடிகராக இருக்கும் ரஜினி முன்பு ஒரு படத்தில் நடிக்க கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். அந்த படம்தான் 'தளபதி'. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் 'தளபதி'. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அவருக்கு கமல்ஹாசன் உதவி உள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த ஒரு நேர்காணலில் ரஜினிகாந்த் இது குறித்து கூறினார். அப்போது அவர் கூறுகையில்,

'தளபதி படத்தில் நடிப்பது கடினமாக இருந்தது. ஒரு நடிகனாக, என்னிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவனை பல இருந்தன. அதேபோல், காதலுக்காகவும் சிலவற்றை கொண்டிருந்தேன். ஆனால், மணிரத்னம் அது எதையும் ஏற்கவில்லை. அவர் என்னை உணரச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. நான் என்ன உணர வேண்டும்? என்று கேட்டேன்.

பின்னர், நான் கமலிடம் இவருடன் (மணிரத்னம்) நடிப்பது மிகவும் கடினம் என்று கூறினேன். 'இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியும்' என்றார் கமல். அதனுடன், மணிரத்னத்தை நடிக்க சொல்லி, அவரை அப்படியே காப்பியடிக்கச் சொன்னார் கமல். அது உண்மையில் வேலை செய்தது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்