இந்தியன் 2 படப்பிடிப்புக்காக தைவான் சென்ற கமல்ஹாசன்

இந்தியன் 2 படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.;

Update: 2023-04-03 12:05 GMT


கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் திருப்பதி அருகே படப்பிடிப்பை நடத்தினர். இறுதிகட்டமாக வெளிநாடுகளில் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர்.

இதற்காக படக்குழுவினர் தைவான் புறப்பட்டு சென்றனர். கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இருந்தபடி 'இந்தியன் 2 படப்பிடிப்புக்காக தைவான் புறப்படுகிறேன்' என்று வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டு உள்ளார். தைவானில் தற்போது படப்பிடிப்பில் அவர் பங்கேற்று வருகிறார்.

தைவானில் 4 நாட்கள் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். அதன்பிறகு படக்குழுவினர் தென் ஆப்பிரிக்கா செல்கிறார்கள். அங்கும் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தி விட்டு சென்னை திரும்புகிறார்கள். முழு படப்பிடிப்பும் அடுத்த (மே) மாதம் இறுதிக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு டப்பிங், கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்க உள்ளன. இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்