தேர்தல் தேதி அறிவிப்பால் கமல்ஹாசன் படம் ரிலீசாவதில் சிக்கல்

கல்கி படம் மே மாதம் 9-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

Update: 2024-03-19 02:43 GMT

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இதில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். கமல்ஹாசனுக்கு வில்லன் வேடம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

கல்கி படம் மே மாதம் 9-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அதே தேதியில் கல்கி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானாவில் நாடாளுமன்ற தேர்தல் மே 13-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலும் அதே தேதியில் நடக்கிறது.

கல்கி படத்துக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் மே 9-ந்தேதி தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் இருக்கும். மே 11-ந்தேதிவரை தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கும்.

எனவே மே 9-ந்தேதி 'கல்கி' படத்தை ரிலீஸ் செய்தால் வசூல் கடுமையாக பாதிக்கும் என்று படக்குழுவினர் அஞ்சுகிறார்கள். எனவே படத்தின் ரிலீசை தள்ளி வைக்கலாமா என்று யோசிப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்