'கல்கி 2898 ஏடி' பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான்?

துல்கர் சல்மானின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2024-07-10 14:09 GMT

imge courtecy:instagram@dqsalmaan

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும்.

அவரது நடிப்பில் வௌியான 'சீதா ராமம்' திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த 'கிங் ஆப் கோதா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. பின்னர், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

தற்போது 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கிய, இப்படம் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், கல்கி 2898 ஏடி பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பவன் சதினேனி இயக்க இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு துல்கர் சல்மானின் பிறந்த நாளான வரும் 28-ந் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்