'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபல நடிகர்கள்? - படக்குழு பகிர்ந்த தகவல்
சமீபத்தில் 'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவியது.;
சென்னை,
கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் இயக்கும் 'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தில் பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. இந்நிலையில், படக்குழு உடனான சமீபத்திய பேட்டியில் இந்த தகவலுக்கு பதில் கிடைத்துள்ளது.
அந்த பேட்டியில், துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடிக்கிறார்களா? என்று படக்குழுவிடம் கேட்கப்பட்டது, அதற்கு படக்குழுவினர் சிரித்துக்கொண்டு, அவை வெறும் வதந்திகள் என்று குறிப்பிட்டனர். இருப்பினும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் சில சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இருப்பதாக அவர்களின் அந்த புன்னகை தெரிவிக்கிறது.