'காதோடு சொல்' - பொன்னியின் செல்வன் படத்தின் புதிய பாடல் வெளியானது

பொன்னியின் செல்வன் படத்தின் 'சொல்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.;

Update: 2022-09-16 16:36 GMT

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'பொன்னியின் செல்வன் -1' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சொல்' என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கிரித்திகா நெல்சன் எழுதியுள்ள இந்த பாடலை ரக்சிதா சுரேஷ் பாடியுள்ளார். திரிஷா மற்றும் சோபிதா துலிபாலா இடம்பெற்றுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


Tags:    

மேலும் செய்திகள்