வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற ஹாலிவுட் பிரபல நடிகர்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு இத்தாலியில் நடைபெறவுள்ள ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

Update: 2024-09-23 20:04 GMT

இத்தாலி,

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு இத்தாலியில் நடைபெறவுள்ள ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. 2003-ல் வெளிவந்த "தி பைரேட் ஆப் தி கரீபியன்" திரைப்படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பெரும் புகழைப் பெற்றார். தொடர்ந்து இந்த படத்தின் பாகங்களும் வெளியானது, பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவரது கலைவாழ்க்கையின் பின்னணியில், ஜானி டெப்பின் திரைப்படங்கள் பல்வேறு பரிசுகளை குவித்துள்ளன. அவருடைய 1997-ல் இயக்கிய "தி பிரேவ்" திரைப்படம் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், "மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்" படத்தையும் இயக்கி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

பிரபலமான நடிகை ஆம்பர் ஹெட்டை காதலித்து 2015-ல் திருமணம் செய்துகொண்ட ஜானி டெப், பின்னர் விவாகரத்து செய்தது அனைவரும் அறிந்ததே. அவர் கலை உலகில் சாதித்தவற்றுக்காகவே இத்தாலியில் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதினைப் பெறவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்