துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நடிகை உடல் தகனம்

கணவருடன் காரில் சென்றபோது நடிகை சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-12-30 19:37 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நடிகை ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர் படத்தயாரிப்பாளர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார்.

இதனிடையே, கடந்த 28-ம் தேதி இரவு நடிகை ரியா குமாரி தனது கணவர், குழந்தையுடன் கவுகாத்தி மாவட்ட்டத்தில் உள்ள பக்னன் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மனைவியுடன் சென்றபோது காரை வழிமறித்த கும்பல் திடீரென துப்பாக்கியால் சுட்டதாகவும். அதில் மனைவி ரியா குமாரி உயிரிழந்துவிட்டதாகவும் கணவர் பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரியா குமாரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் பிரகாஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ரியா குமாரியின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.   

Tags:    

மேலும் செய்திகள்