துபாயில் ஜவான் டிரைலர் வெளியீட்டு விழா - லேட்டஸ்ட் அப்டேட்!

ஜவான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

Update: 2023-08-31 04:27 GMT

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இயக்குனர் அட்லி இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.

ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிரூத், இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியாவுடன் சென்னை விமான நிலையம் வந்தனர்.

அப்போது, இசையமைப்பாளர் அனிரூத்துடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் ரசிகர்களை கலைத்து அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்