முன்னாள் முதல்-மந்திரியின் பேரனை கரம் பிடிக்கிறார் ஜான்வி கபூர்
திருப்பதியில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.;
மும்பை,
தமிழ், இந்தி திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த ஸ்ரீதேவி இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்தநிலையில், ஜான்வி கபூரும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.
இந்த நிலையில் இருவரும் காதலிப்பதை போனிகபூர் உறுதிப்படுத்தி உள்ளார். காதலரின் பெயர் பொறித்த நெக்லசை ஜான்வி கபூர் அணிந்துள்ளார். தற்போது திருமணத்துக்கு ஜான்வி கபூர் தயாராகி வருகிறார். திருப்பதியில் விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜான்வி கபூரும் திருப்பதி கோவிலில்தான் எனது திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.