கொஞ்சம் ஒதுங்கிரு...வரது தலைவரு...! ஜெயிலர் மேக்கிங் வீடியோ ரிலீஸ் - ரஜினிகாந்த் ரகிகர்கள் உற்சாகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை,
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படம் ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் பிரியங்கா அருள்மோகன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் செட்டில் ரஜினிகாந்த்க்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் காட்சிகளை விளக்குகிறார். அதுமட்டுமில்லாமல், ஜெயிலர் படம் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. ரஜினி மாஸாக ஸ்டைலாக இருக்கும் வீடியோவை ரசிகர்கள் சமூக ஊடங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.