'என் உதடு என் இஷ்டம்' - உதட்டு சர்ச்சைக்கு ரேஷ்மா பதிலடி
சின்னத்திரை நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
சென்னை,
சின்னத்திரை நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதின் மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இருந்து 'நியூட்ரல் ரேஷ்மா' என்றும் அழைக்கப்பட்டார்.
ரேஷ்மா, தனது உதட்டை பெரிதாக்க சில சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதனை பல நிகழ்ச்சிகளிலும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரது உதட்டு சிகிச்சை விமர்சனமாகியே வருகிறது. சமீபத்தில் கூட ரேஷ்மாவின் உதடு சிகிச்சை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. இதற்கு ரேஷ்மா பதிலடி கொடுத்துள்ளார். அதில்,
'இது என் உதடு. என் இஷ்டம். இது இப்படி இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது. இதற்காக யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என ரேஷ்மா தெரிவித்துள்ளார். ரேஷ்மாவின் இந்த கருத்தை நடிகர்-நடிகைகள் பலரும் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.