ராஷ்மிகா, தீபிகா படுகோனே மீது வெறுப்பு காட்டுவதா? நடிகை ரம்யா ஆவேசம்
ராஷ்மிகா, தீபிகா படுகோனே மீது வெறுப்பு காட்டுவதா? என்று நடிகை ரம்யா ஆவேசம் கண்டித்துள்ளார். இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,;
கதாநாயகிகள் பலர் சர்ச்சைகளில் சிக்கி சமூக வலைத்தளங்களில் அவதூறுக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்ததும் அவருக்கு எதிராக அவதூறுகள் பரவின. இதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றார். நடிகை சாய்பல்லவி அரசியல் ரீதியாக சொன்ன கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. நடிகை ராஷ்மிகா பேசிய கருத்துக்காக கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பலர் வற்புறுத்தினர். தற்போது தீபிகா படுகோனே இந்தி படத்தின் பாடல் காட்சியில் காவி நிறத்தில் அணிந்த நீச்சல் உடை சர்ச்சையாகி உள்ளது. இப்படி நடிகைகளை எதிர்ப்பதை நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா கண்டித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''சமந்தா விவாகரத்துக்காகவும், சாய்பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், தீபிகா படுகோனே அணிந்த ஆடைக்காகவும் கேலிக்கும், அவதூறுக்கும் உள்ளாகி உள்ளனர். எதையும் தேர்வு செய்யும் சுதந்திரம் என்பது பெண்களின் அடிப்படை உரிமை. பெண்கள் துர்காவின் உருவம். சக்தி வாய்ந்தவர்கள். பெண் வெறுப்பு என்பது தீமையானது. நாம் அதை எதிர்த்து போராட வேண்டும்" என்று கூறியுள்ளார். ரம்யா தமிழில் சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசுடன் பொல்லாதவன், சிம்புவுடன் குத்து, அர்ஜுனின் கிரி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.