சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் தர வற்புறுத்தல்
பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் ‘ஹை 5' என்ற குழந்தைகள் படம் தயாராகி உள்ளது. இந்த படம் குறித்து பட விழாவில் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,;
''நிறைய பேர் படம் எடுக்கிறார்கள். ஆனால் பல படங்கள் மக்களைபோய் சேர்வது இல்லை. பெரிய கதாநாயகர்கள் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வருகிறது. ஓ.டி.டி தளங்களிலும் முன்னணி நடிகர்கள் படங்களை வெளியிடவே முயற்சிக்கின்றனர். விஜய், அஜித்குமார் படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. அந்த படங்கள் பற்றி என்ன சொன்னாலும் முக்கிய தகவல்களாகி விடுகின்றன. 'ஹை 5' போன்ற சிறு பட்ஜெட் படங்களை தியேட்டர்களில் வெளியிட வேண்டும். பெரிய படங்களை தியேட்டர்களில் போட்டி போட்டு ரிலீஸ் செய்கிறார்கள். அதுபோல் சிறுபட்ஜெட் படங்களுக்கும் தியேட்டர்கள் தரவேண்டும். நல்ல கதையம்சத்தோடு இருந்தால் சிறுபட்ஜெட் படங்களும் வெற்றி பெறும் சமீபத்தில் வெளியான 'லவ்டுடே' படம் வெற்றி பெற கதைதான் காரணம். 'ஹை 5' டிரெய்லரில் ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள்" என்றார்.