எந்த சண்டையில் சட்டை கிழிஞ்சதோ...? மேலாடையான ஜீன்ஸ் பேண்ட், ஊர் சுற்ற கிளம்பிய உர்பி ஜாவேத்

நடிகை உர்பி ஜாவேத் மேலாடையாக ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து சென்றபோதும், தனக்கு நல்ல மனமும் உள்ளது என நிரூபித்து உள்ளார்.

Update: 2023-01-31 13:17 GMT



புனே,


இந்தி நடிகை மற்றும் மும்பை பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அரைகுறை உடையில் எடுத்த ஆபாச புகைப்படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

அவருடைய தனித்துவ ஆடைகள் பெரும்பாலும் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.

இந்த முறை ரசிகர்களை மகிழ்விக்க புது முறையை கையாண்டுள்ளார் உர்பி ஜாவேத். உடம்பின் மேல் பகுதியில் அணிவதற்கான உடையை அணியாமல் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை அணிந்தபடி மும்பை தெருக்களில் வலம் வர தொடங்கினார்.

அவரை அடையாளம் கண்டு கொண்ட பத்திரிகையாளர்கள் திரண்டு, பரபரப்புடன் புகைப்படங்களை எடுத்து தள்ளி விட்டனர்.

அவர் எப்போதும் அணிய கூடிய டி-சர்ட்டை அணியாமல் கால்சட்டையாக அணிய கூடிய நீல நிற ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை உருமாற்றி சட்டையாக போட்டு கொண்டார்.

அதற்கு அவர் கூறிய காரணம், இதற்கு முன்பு போட்டிருந்த சட்டை வீட்டை விட்டு கிளம்பிய சற்று நேரத்தில் கிழிந்து விட்டது என கூறியுள்ளார். இதனால், சற்று தாமதத்துடன் வந்து விட்டோமே என புகைப்படம் எடுக்க வந்தவர்கள் வருத்தமடைந்தனர்.

தொடர்ந்து உர்பி கூறும்போது, அதனால் என்ன செய்வது? உடனடியாக வேறொரு ஜீன்ஸ் பேண்ட்டை எடுத்து, மேலாடையாக மாற்றி அணிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

எனினும், அந்த மேலாடை எப்படி கிழிந்தது என்று கூறவில்லை. இந்த ஆடைகளுக்கு இணையாக காட்சி தரும் வகையில், சிவப்பு நிறத்தில் பறக்கும் பட்டம் போன்ற பெரிய காதணியையும் அணிந்து உள்ளார்.

இத்துடன் உர்பி நிற்கவில்லை. வந்திருந்த பத்திரிகைக்காரர்களை அருகே இருந்த உணவு விடுதிக்கு அவர்களை அழைத்து சென்றுள்ளார். அது மாற்று திறனாளிகள் நடத்த கூடிய உணவு விடுதி ஆகும்.

அதில், அவர்களுக்கு தனது செலவில் உணவு வாங்கி கொடுத்து உள்ளார். அதன்பின் அவர்களிடம், பில்லை நான் கட்டி விடுகிறேன். இனி தொடர்ந்து நீங்கள் இந்த உணவு விடுதிக்கு வந்து சாப்பிடுங்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என கேட்டு கொண்டார். அவர் கூறியபின்பு, அதனை கேட்காமல் இருக்க முடியுமா? என்று கூறி விட்டு சாப்பிட்ட திருப்தியுடன் சென்று விட்டனர்.

நான் ஒரு இந்தியன், நான் விரும்பும் ஆடைகளை அணிய எனக்கு முழு உரிமை உள்ளது. எனது வேலைக்கு ஏற்ப இந்த ஆடைகளை அணிகிறேன் என்றும் சில சமயங்களில் வேலை நெருக்கடியில் உடை மாற்ற நேரம் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆடை அணிவது தனக்கு அலர்ஜியாக இருக்கிறது என முன்பு ஒருமுறை அளித்த பேட்டியின்போது உர்பி ஜாவேத் கூறினார். ஆனால், அவருக்குள்ளும் நல்ல மனம் உள்ளது என்று அவர் வெளிப்படுத்தி விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்