சல்யூட் அடித்த யோகி பாபு, பதிலுக்கு தும்பிக்கையை உயர்த்தி சல்யூட் செய்த யானை...!

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ உப்பிலியப்பன் கோவிலில் யோகி பாபு சாமி தரிசனம் செய்துள்ளார்.

Update: 2022-08-02 10:36 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. காமெடியில் மட்டுமின்றி மண்டேலா, கூர்க்கா உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் இவர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். தொடர்ந்து கமல், ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ உப்பிலியப்பன் கோவிலில் யோகி பாபு சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து கோவில் யானைக்கு அவர் சல்யூட் அடிக்க, யானையும் தும்பிக்கையை உயர்த்தி சல்யூட் செய்கிறது. யோகி பாபுவுக்கு யானையும் பதிலுக்கு தும்பிக்கையை உயர்த்தி சல்யூட் செய்தது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய காமெடி மற்றும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் மிகவும் எளிமையாக யோகிபாபுவை பார்க்க முடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்