சுதந்திரமாக இருக்கிறேன்... அதை இழக்க விரும்பவில்லை - திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை சதா

நடிகை சதாவுக்கு 40 வயது ஆகிறது.;

Update: 2024-06-19 12:44 GMT

தமிழில் 2003-ல் வெளியான ஜெயம் படம் மூலம் அறிமுகமான சதா தொடர்ந்து அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. சதாவுக்கு 40 வயது ஆகிறது. ஆனாலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்.

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்கு நடிகை சதா பதில் அளித்து கூறியதாவது:-

நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். திருமணம் செய்து கொண்டு இந்த சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. இதுவரை எனது இதயத்திற்கு நெருக்கமாக யாரும் வரவில்லை. நான் எதிர்பார்க்கும்படி என் மனதுக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் கிடைக்கும்போது திருமணத்தை பற்றி யோசிப்பேன்.

எனக்கு பெற்றோர் நிச்சயித்தவரை மணக்க விரும்பவில்லை. காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். கணவரோடு வாழ்வது கஷ்டம் என்று தோன்றினால் விவாகரத்து செய்து கொள்வதில் தவறு இல்லை. விருப்பமில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு எந்த ஒரு கணவன் மனைவியும் சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்