மீண்டும் அரசியலில் சிரஞ்சீவி...! "அரசியலில் இருந்து நான் விலகினாலும் என்னை விட்டு அது விலகவில்லை

நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை’ என்ற நடிகர் சிரஞ்சீவி பேசிய ஆடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-09-21 09:58 GMT

திருமலை:

தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவில், 'நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை' என்று பேசி உள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் போட்டியிட்டு சிரஞ்சீவி உள்பட 18 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். சில வருடங்கள் அரசியலில் இருந்த பிறகு கட்சியை கலைத்து காங்கிரசில் இணைத்துக் கொண்டு ராஜ்யசபா எம்.பி.யாக சிரஞ்சீவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறகு அரசியலை விட்டு விலகி இருந்த சிரஞ்சீவி மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இருப்பினும், அரசியல்வாதிகளுடன் நல்லுறவு வைத்துள்ள அவர் அரசியல்வாதிகள் பங்கேற்கும் சில கூட்டங்களில் கூட பங்கேற்று வந்தார்.

மேலும், தனது தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். இந்நிலையில், சிரஞ்சீவி பதிவு தற்போது வைரலாகி உள்ளது. இது பட விளம்பரமா? அல்லது தனது தம்பியின் கரத்தை வலு சேர்க்க மீண்டும் அரசியலில் களம் இறங்க இருப்பதற்காகவா? என்று ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்