உடல்நலக்குறைவு: நடிகர் டி.ராஜேந்தர் ஆஸ்பத்திரியில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் டி.ராஜேந்தர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-05-23 18:10 GMT

கோப்புப்படம்

சென்னை,

நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்திர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.ராஜேந்தர் கோலிவுட் துறையில் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கியவர். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான ராஜேந்தர், இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த இருதயதவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்