'முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறேன்' - கவிஞர் வைரமுத்து

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-10 01:11 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போதுவரை வெள்ளம் வடியவில்லை. மேலும் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி.. எனும் ஆங்கிலக் கவிதை நினைவின் இடுக்கில் கசிகிறது. வீட்டுக்கு தண்ணீர் இல்லை என்பது சிறுதுயரம் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம்.

விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன். என் கடமையின் அடையாளமாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன். பொருள்கொண்டோர் அருள்கூர்க சக மனிதனின் துயரம் நம் துயரம் இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்' என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்