எனக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை - நடிகை சுகன்யா

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகை சுகன்யா 'ஜெய் ஸ்ரீராம்' எனும் பாடலை எழுதி பாடியிருந்தார்.

Update: 2024-01-24 19:45 GMT

சென்னை, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகை சுகன்யா 'ஜெய் ஸ்ரீராம்' எனும் பாடலை எழுதி பாடியிருந்தார். இந்த பாடலுக்கு அவரே இசையமைத்திருந்தார். இதுகுறித்து, 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்தப் பாடலை உருவாக்கி உள்ளேன், என்று கூறினார்.

இதன் காரணமாக நடிகை சுகன்யா அரசியலில் களமிறங்க போவதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 'எனக்கு சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுளுக்கு பூஜை செய்த பின்னர் தான் இன்றும் சினிமா படப்பிடிப்பு தொடங்குகிறது. 500 வருடங்களுக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதை உலகமே கொண்டாடி வருகிறது. இதை நாம் கொண்டாடவில்லை என்றால்தான் தவறு. அதற்காகத்தான் நான் இந்த பட்டை பாடினேன். மற்றபடி எனக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை, என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்