"யாரையும் சந்தோஷப்படுத்தவதற்காக நான் இல்லை" பதிலடி கொடுத்த பிரபல பாடகி பூஜா

சமூகவலைத்தளங்களில் வெளியிடும் படங்களை முன்வைத்து மதிப்பிடுவர்களுக்குப் பதிலடி கொடுத்த பிரபல பாடகி பூஜா.

Update: 2022-09-28 08:25 GMT

சென்னை

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலம் திரைப்படப் பின்னணிப் பாடகியான பூஜா வைத்தியநாதன் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். பார்க்காத பார்க்காத (வருத்தப்படாத வாலிபர் சங்கம்), ஜிங்கிலியா (புலி), ஆளப் போறான் தமிழன் (மெர்சல்), மல்லிப்பூ (வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்குப் பதிப்பு) என இவர் பாடிய பல பாடல்கள் மக்களைக் கவர்ந்துள்ளன.

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் பூஜா கூறியிருப்பதாவது:-

ஓரளவு உடல் தெரிவது போல உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவு செய்யும்போதெல்லாம் நான் எப்படி உடையணிய வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறுகிறார்கள்.

முதலில் - என் விருப்பம் சவுகரியத்துக்கு ஏற்றாற்போலத்தான் நான் உடையணிகிறேன். மற்றபடி யாரையும் எல்லோரையும் சந்தோஷப்படுத்த அல்ல.

இரண்டாவதாக - மற்றவர்கள் என்னவாறு மதிப்பிடுவார்களோ என்றும் தனிப்பட்டமுறையிலான உரையாடல்களுக்கு வழிவகுக்குமோ எனப் பயந்தும் முதலில் (ஓரளவு உடலை வெளிப்படுத்துவதாகச் சிலருடைய கண்களுக்குத் தெரியலாம்) சில படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட மாட்டேன்.

தற்போது யார் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என நினைத்துப் பயப்படாமல் புகைப்படங்களை வெளியிடுகிறேன். தனிப்பட்ட சாட்டில் என்னிடம் வந்து, இதுபோல உடையணிய வேண்டாம், எனக்குப் பொருத்தமாக இல்லை. எனக்கென்று ஒரு பெயர் உள்ளது.

அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இதுபோல எண்ணம் கொண்டவர்கள் இதை மீண்டும் மீண்டும் படியுங்கள். என் உடல், என் உடைகள், என் வாழ்க்கை. இங்கு யாரையும் சந்தோஷப்படுத்தவதற்காக நான் இல்லை. என்னுடைய பதிவுகள் பிடிக்கவில்லையென்றால் இங்கு என்னைப் பின்தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார். '



Tags:    

மேலும் செய்திகள்