உருவ கேலியை சாடிய நடிகை ஹூமா குரோஷி

உருவ கேலி செய்பவர்களை நடிகை ஹூமா குரேஷி சாடி உள்ளார்.;

Update:2022-08-18 15:06 IST

திரையுலகில் குண்டாக இருக்கும் நடிகைகளையும், ஒல்லியாக வரும் நடிகைகளையும் உருவகேலி செய்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு காயப்படுத்தும் போக்கு நீடித்து வருகிறது. இதனை பலர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் இந்த கேலியை செய்பவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் உருவ கேலி செய்பவர்களை நடிகை ஹூமா குரேஷி சாடி உள்ளார். இவர் ரஜினிகாந்துடன் காலா, அஜித்குமாருடன் வலிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஹூமா குரோஷி கூறும்போது, ''பெண்களாகிய நாங்கள் தினமும் உருவ கேலி பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். இந்த பிரச்சினையில் அனைத்து பெண்களுமே சிக்கி வருகிறார்கள். பெண்களின் தோற்றத்தை அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி கேலி செய்கிறார்கள். உருவகேலி செய்வது நமக்குள் ஊறிப்போன ஒன்றாக மாறி விட்டது. உருவ கேலிகள் ஒருவரின் நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்து விடுகிறது. இந்த பிரச்சினையை மையமாக வைத்து தயாராகி உள்ள ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன். இந்த படம் உருவ கேலி செய்பவர்கள் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்