விரைவில் கைதி 2-ம் பாகம்

தமிழில் வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் கார்த்தி நடித்த கைதி படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது.

Update: 2022-06-07 09:41 GMT

கைதி படம் 2019-ல் வெளியாகி வெற்றி பெற்றது. கதாநாயகி, பாடல்கள் இல்லாமல் இந்த படம் வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கைதி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும்போதே படமாக்கி விட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.

தற்போது அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்துள்ள விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கைதி 2-ம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் சமூக வலைத்தளத்தில் கைதி படத்தின் 2-ம் பாகத்தை ஆரம்பிக்கலாமா? என்று பதிவிட்டு உள்ளார். இதன் மூலம் கைதி-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்