45 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படம்...! 71 வயதில் வெளியிட்ட ஜீனத் அமன்...!
1971 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் பிரேம் சோப்ரா நடிப்பில் வெளியான 'ஹல்சுல்' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜீனத் அமன்.
மும்பை
இந்தி பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜீனத் அமன். 'தம்மர தம்' என்ற பாடலில் ஆடிப்பாடி அந்த காலத்து இந்திய இளைஞர்களை கிறங்கடித்து இருந்தார். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.
71 வயதாகும் பாலிவுட் நடிகை ஜீனத் அமன் தனது இளமை காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தற்போதைய இளைஞர்களையும் வாயடைக்க செய்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் பிரேம் சோப்ரா நடிப்பில் வெளியான 'ஹல்சுல்' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜீனத் அமன்.
ஜீனத் அமன் மிஸ் இந்தியா மற்றும் மிஸ் பசிபிக் ஆசியா அழகுப் போட்டிகளில் 70-களின் தொடக்கத்திலேயே பட்டம் வென்றவர்.
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சிக்கன்னியாக கலக்கிய ஜீனத்தின் கால்ஷீட்டுக்காக இயக்குநர்கள் மற்றும் பட தயாரிப்பாளர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் அளவிற்கு பிரபலமானார்.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜீனத் அமன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த சத்தியம் சிவம் சுந்தரம் திரைப்படத்தில கவர்ச்சியாக நடித்தார். அப்போது எல்லோரையும் நிறைய புருவங்களை உயர்த்த வைத்தது அது மட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. இது ஆபாசமானது என குற்றம் சாட்டப்பட்டது.
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான முதல் தற்போது வரை மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஜீனத் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் தனது இளமை காலத்து புகைப்படங்களையும் நினைவு கூர்ந்து அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் நடிகை ஜீனத் அமன், தனது காலத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இணையவாசிகளையும், பாலிவுட் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜீனத் அமனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.
அதில் அவர் சிற்றின்பத்துடன் இருப்பது தனது கதாபாத்திரத்தின் ஒரு பகுதியாகும், கதைக்களத்தின் முக்கிய அம்சம் அல்ல என்றும், அதில் ஆபாசமாக எதையும் காணவில்லை என்றும் கூறி உள்ளார்.
ஜீனத் அமன், சினிமா, தனிப்பட்ட உறவுகள் மற்றும் அனைத்து நல்ல விஷயங்களையும் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்.