'கல்கி 2898 ஏடி': புதிய வீடியோ பாடல் வெளியானது

'கல்கி 2898 ஏடி' படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

Update: 2024-07-05 08:06 GMT

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியான படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷாபதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இப்படம் இதுவரை ரூ.700 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக கல்கி படக்குழு இரண்டு பாடல்களை வெளியிட்டது. தற்போது இப்படத்தில் தீபிகா படுகோன் இடம் பெரும் ஹோப் ஆப் ஷம்பாலா வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்