கமல் ஹாசன், மணிரத்னத்தை சந்தித்த துல்கர் சல்மான்
'தக் லைப்' படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகினார்.;
சென்னை,
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. 'தக் லைப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தக் லைப் படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகினார். அவருக்கு பதிலாக படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.
இதனால் ஏன் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், துல்கர் சல்மான் விலகியதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,
"அவரின் மற்ற படப்பிடிப்பு தேதிகளுடன் தக் லைப் படத்தின் ஷெட்யூல் ஒரே நேரத்தில் வர இருப்பதால் தேதிகள் ஒதுக்க முடியாத காரணத்தால் துல்கர் சல்மான் படத்திலிருந்து விலகிவிட்டார்" என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் சென்னை வந்திருக்கிறார். அப்போது கமல் ஹாசன் மற்றும் மணிரத்னத்தை சந்தித்தார். பின்னர், தக் லைப் படத்திலிருந்து விலகியது குறித்து தன் நிலைமையை விளக்கியுள்ளார். அப்போது கமல் ஹாசன் துல்கர் சல்மானின் அடுத்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.