மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜி.வி பிரகாஷ் கூட்டணி

மீண்டும் ஒரு புதிய படத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைய உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார்.;

Update: 2024-09-16 16:03 GMT

சென்னை,

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக நானே வருவேன் படம் வெளியானது. படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். பீஸ்ட், நானே வருவேன், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முன்னதாக, இவர்கள் கூட்டணியில் மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் வெளியானது.

இந்த நிலையில், செல்வராகவன் படத்துக்கு இசையமைக்கவுள்ளதாக ஜி.வி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், கிரீடம், பொல்லாதவன், ஆடுகளம், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, தலைவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அசுரன் படம் இவருக்கு இசையில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. சூரரைப்போற்று படம் இவருக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது.

Tags:    

மேலும் செய்திகள்