நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

Update: 2024-07-23 16:25 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இன்று சூர்யா தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி வடசென்னை தெற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக அயனாவரம் முகப்பேர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

அந்த தங்க மோதிரங்களை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் குழந்தைகளுக்கு அணிவித்தார். சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று கங்குவா படத்தின் முதல் பாடலான "ஆதி நெருப்பே...ஆறாத நெருப்பே..." என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. விவேகா பாடல் வரிகளுக்கு மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்