கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியீடு..!

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2023-07-22 08:41 GMT

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. குதிரையின் மீது சூர்யா அமர்ந்து செல்வது போன்று வித்தியாசமான லுக்கில் உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் "கங்குவா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இரவு 12.01க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்