கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை, கொண்டாட்டம்தான் - நடிகை தமன்னா

”கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது கீழ்த்தரம் கிடையாது. அது ஒருவகையான கொண்டாட்டம். இதுகுறித்தான பார்வை மாற வேண்டும்” என நடிகை தமன்னா கூறியுள்ளார்.

Update: 2024-04-01 09:51 GMT

சென்னை,

நடிகை தமன்னா முதன்முறையாக சாந்த் சா ரோஷன் ஷேரா என்ற இந்தி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். 2006-ம் ஆண்டு வெளியான கேடி படத்தில் நடித்து, அவர் தமிழில் அறிமுகம் ஆனபோதும், பையா, பாகுபலி படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை தேடி தந்தன.

கடைசியாக தமிழில் அவர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனார் நடிகை தமன்னா. இந்தப் பாடலில் நடிகை தமன்னாவின் கிளாமர், நடனத்திற்கு ரசிகர்கள் பயர் விட்டு வந்தனர்.


தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் 'அரண்மனை4' படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் குறித்து பேட்டியளித்த தமன்னாவிடம், " முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டுவது ஏன்?" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கிளாமர் காட்டுவதும் அது போன்ற பாடல்களில் நடனம் ஆடுவதும் கொண்டாட்டம்தான்" எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், "கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது. இதுகுறித்தான எண்ணத்தை ரசிகர்கள் மாற்ற வேண்டும். 'காவாலா...' பாடலைப் பார்த்துவிட்டு சிலர் கீழ்த்தரமாக இருக்கிறது என்றெல்லாம் கமென்ட் செய்தார்கள். உண்மையில், அது எனக்கு ஆச்சரியம்தான்! கிளாமர் பாடல்கள் ஒருவகை கொண்டாட்டம்தான். அதை ரசிக்கப் பழக வேண்டுமே தவிர, இப்படி நெகட்டிவிட்டி பரப்பக்கூடாது. பெண்களும் கிளாமர் குறித்தான பார்வையை மாற்ற வேண்டும்" என்றார்.


'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.


Tags:    

மேலும் செய்திகள்