வெப் தொடராகும் காந்தி வாழ்க்கை

இந்தி டைரக்டரான ஹன்சால் மேத்தா 'காந்தி' வெப் தொடரை இயக்குகிறார்.

Update: 2024-01-22 00:30 GMT

தேச தலைவர்கள், பிரபலங்களின் வாழ்க்கை திரைப்படங்களாகவும், வெப் தொடர்களாகவும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. அந்தவகையில் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை படம் வெப் தொடராக தயாராகிறது. பாலிவுட்டின் முன்னணி இந்தி டைரக்டரான ஹன்சால் மேத்தா இந்த வெப் தொடரை இயக்குகிறார். படத்துக்கு 'காந்தி' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகங்களை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் தயாராகிறது. இதில் காந்தியாக பிரதிக் காந்தி நடிக்கிறார்.

'ஸ்கேம் 1992', 'பாய்' ஆகிய படங்களை தொடர்ந்து ஹன்சால் மேத்தா-பிரதிக் காந்தி 3-வது முறையாக இணைகிறார்கள். தற்போது காந்தி படப்பிடிப்பு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வெப் தொடரை, காந்தி தொடர்புடைய வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கு படக்குழு செல்ல இருக்கிறது. காந்தி வெப் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'காந்தி' வெப் தொடரை தொடர்ந்து 'தி பக்கிங்காம் மர்டர்ஸ்' என்ற படத்தை ஹன்சால் மேத்தா இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்