'ஜென்டில்மேன்' முதல் 'ஜீன்ஸ்' வரை: ஷங்கருக்கு அடித்தளம் அமைத்த படங்கள்

சிறந்த இயக்குனராக இருக்கும் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Update: 2024-08-17 05:19 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இப்போது உள்ள இயக்குனர்களிடம் யாருடைய படங்கள் உங்களை அதிகம் ஈர்த்தது என்று கேட்டாள் அதில், ஷங்கர் இருப்பார். இவ்வாறு சிறந்த இயக்குனராக இருக்கும் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில், ஷங்கர் இவ்வாறு முன்னணி இயக்குனராக இருப்பதற்கு அடித்தளம் போட்ட படங்களை தற்போது காணலாம்.

1. ஜென்டில்மேன்

தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர். கடந்த 1993-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அர்ஜுன், மது, நம்பியார், கவுண்டமணி,செந்தில்  உள்ளிட்டோர் நடித்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

2. ஜீன்ஸ்

பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் ஜீன்ஸ். பிரசாந்த் இரண்டு வேடங்களில் நடித்த இப்படம் வெளிநாட்டில் அதிக காட்சிகள் படமாக்கப்பட்ட தமிழ் படங்களில் ஒன்றாக உள்ளது.

3. இந்தியன்

கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இப்படம் பல விருதுகளை பெற்றது.

4. முதல்வன்

ஷங்கர் இயக்கிய முதல்வன், கோலிவுட்டின் சிறந்த அரசியல் சார்ந்த படங்களில் ஒன்றாகும். இதில் அர்ஜுன், ரகுவரன் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 1999-ம் ஆண்டு வெளியானது.

5. அந்நியன்

விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ், விவேக் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் அந்நியன். இப்படத்தில் விக்ரமின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. மேலும், இது விக்ரமிற்கு சிறந்த படமாகவும் அமைந்தது.

சமீபத்தில், இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. மேலும், ராம் சரண், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்