சாந்தனு நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
நடிகர் சாந்தனு நடித்துள்ள 'இராவண கோட்டம்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.
சென்னை,
'மதயானை கூட்டம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ள திரைப்படம் 'இராவண கோட்டம்'. இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக 'கயல்' ஆனந்தி நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளாஇர். கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'இராவண கோட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021-ம் ஆண்டின் இறுதியில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று முதல் 'வாரிசு' மற்றும் 'துணிவு' திரைப்படத்துடன் இணைந்து திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. விரைவில் 'இராவண கோட்டம்' திரைப்படம் வெளியாக உள்ளது.