ஓவியா, யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
ஓவியா, யோகி பாபு இணைந்து நடிக்கும் 'பூமர் அங்கிள்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.;
சென்னை,
நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஓவியா இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு முதலில் 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காண்டிராக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயராகும்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதற்கு மதிப்பு அளிக்கும் விதமாக படத்தின் டைட்டிலை 'பூமர் அங்கிள்' என்று மாற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை ஓவியா பிரபல ஹாலிவுட் திரைப்படமான வொண்டர் வுமன் உடையில் இருப்பது போன்றும், யோகி பாபு கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை வாணி போஜன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கிறார். சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.