படங்கள் தொடர்ந்து தோல்வி... மோகன்லால் ரசிகர்கள் வருத்தம்

மோகன்லால் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Update: 2023-01-29 02:26 GMT

மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் மோகன்லால் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஏற்கனவே அவரது நடிப்பில் வந்த திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. ஆனால் அதன்பிறகு வந்த படங்கள் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.

மலையாளத்தில் மோகன்லால் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவரது நடிப்பில் சமீபத்தில் வந்த அலோன் படத்தின் முதல் நாள் வசூலே வெறும் ரூ.45 லட்சம் தான். அந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. மான்ஸ்டர் படமும் தோற்றது. சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த கூடியவர் என்ற பெயர் மோகன்லாலுக்கு உண்டு. அப்படிப்பட்டவர் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவது திரையுலகினரை அதிர்ச்சியாக்கி உள்ளது.

தற்போதைய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கபடி அவரது படங்களின் கதைகள் இல்லை என்ற பேச்சுக்கள். கதை தேர்வில் மோகன்லால் தடுமாறுவதாகவும் வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. படங்கள் தோற்றாலும் மோகன்லால் சம்பளம் உயர்ந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்