குடும்ப வாரிசு... இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை ஆலியா பட்

நடிகை ஆலியா பட் கர்ப்பம் அடைந்திருப்பது பற்றி சிங்கத்தின் குடும்ப புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.;

Update: 2022-06-27 07:19 GMT



புதுடெல்லி,



இந்தி திரையுலகில் காதலர்களாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர்-நடிகை ஆலியா பட்டின் திருமணம் கடந்த ஏப்ரல் 14ந்தேதி புது வருட தினத்தன்று, பிற்பகல் 3 மணிக்கு பிறகு மும்பை, பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. திருமண சடங்குகள் 4 புரோகிதர்களால், பஞ்சாபி முறைப்படி நடத்தி வைக்கப்பட்டது.

திருமணத்தில் விருந்தினர்களுக்காக 50 வகையான உணவு கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இத்தாலியன், பஞ்சாபி, மெக்‌சிகன், ஆப்கான் உணவு வகைகள் திருமணத்தில் பிரதான இடம் பிடித்திருந்தது. நீது கபூர் தனது மகனின் திருமணத்திற்கு டெல்லி மற்றும் லக்னோவில் இருந்து சமையல் கலைஞர்களை வரவழைத்திருந்தார். ஆலியா பட் சைவ உணவு பிரியர் என்பதால் அவருக்காக 25 வகையான சைவ உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என்ற அவரது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆலியா சென்றார். இதுபற்றிய புகைப்படங்களும் வெளிவந்து வைரலானது. ஆலியா பட் போன்றே தொழில் பக்தி கொண்ட அவரது கணவர் ரன்பீர் கபூரும் அவருக்கு முன்பே, தனது பணிநிமித்தம் டி-சீரிஸ் அலுவலகத்திற்கு சென்றார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஆலியா பட் கர்ப்பம் அடைந்திருப்பது பற்றிய புது பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

அதில், தலையில் தொப்பி அணிந்தபடி நடிகர் ரன்பீர் கபூர் காணப்படுகிறார். நடிகை ஆலியா பட் அல்டிராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்கிறார். இதனை திரையில் காண்பிக்கும் கணினியில், இதயம் ஒன்றின் எமோஜிக்கான ஐகான் தென்படுகிறது. அதனை பார்த்து ஆலியா புன்னகைக்கிறார்.

இந்த புகைப்படத்துடன், கபூர் மற்றும் சன்ஸ் என தலைப்பிட்டு, எங்களுடைய குழந்தை... விரைவில் வரவிருக்கிறது என்றும் அதனை தொடர்ந்து இதயம் ஒன்றின் எமோஜி மற்றும் தீப்பொறிக்கான எமோஜியும் இடம் பெற்றிருந்தது.

இதனுடன், ஆலியா மற்றொரு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். அதில், ஆண் சிங்கம் ஒன்றை, பெண் சிங்கம் முகத்தில் இடித்தபடி இருக்கிறது. அவற்றை சிங்க குட்டி ஒன்று பார்த்து கொண்டு இருக்கிறது. ஆலியா தம்பதியின் குழந்தை வர தயாராக இருக்கிறது என்பதற்கு அடையாளம் தெரிவிக்கும் வகையில் இந்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இதனையடுத்து, அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையை பொழிந்தனர். திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அதில், நடிகை ரகுல் பிரீத் சிங், இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்டோரும் அடக்கம்.

நடிகை ஆலியா பட் கடைசியாக பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண் எதிர்கொள்ளும் வாழ்வியல் சார்ந்த நடைமுறைகளை விளக்கும் கங்குபாய் கத்தியாவடி என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். அவர் அடுத்து, பிரம்மஸ்திரா பாகம் 1 சிவா என்ற படத்தில் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்