நினைத்து... நினைத்து பார்த்தேன்...! பாடகர் கே.கே. வின் இறுதி நிமிடங்கள்..!

பாடகர் கே.கே. வின் மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது.

Update: 2022-06-01 10:05 GMT

கொல்கத்தா

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் ( வயது 53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் 66க்கும் மேற்பட்ட பாடல்களை கேகே பாடியுள்ளார். அதில் காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு), ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.

53 வயதான பாடகர் கேகே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார். கேரளத்து தம்பதிக்கு மகனாக பிறந்த கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையிலும் பாடியுள்ளார்.

ரசிகர்கள் பலர் தங்களது டுவிட்டரில் மறைந்த பாடகர் கேகேவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் சாமிக் பட்டாச்சார்யா கூறும் போது 3 ஆயிரம் பேர் கூடகூடிய இடத்தில் 7 ஆயிரம் பேர் கூடி உள்ளனர் என கூறினார். இதற்கு பதில் அளித்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குணால் கோஷ் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாஜக தனது கழுகு அரசியலை நிறுத்த வேண்டும். அவரது மரணம் உண்மையில் துரதிர்ஷ்டவசமானது, நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமாக இருக்கிறோம். ஆனால் பாஜக செய்வதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

காவி முகாம் அதன் கழுகு அரசியலை நிறுத்த வேண்டும். அவர்கள் மரணத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்றார்.

முதல் மந்திரி மம்தா அறிவித்தபடி, பாடகர் கே.கே உடலுக்கு, மேற்குவங்க அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தபட்டது. ரவீந்திர சதன் கலாச்சார மையத்தில் வைக்கப்பட்ட பாடகர் கே.கே. உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Image courtesy: https://indianexpress.com/Partha Paul

1) மாரடைப்பால் கிருஷ்ணகுமார் குன்னத் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் ஆனால் அவரது மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகள் அது திடீர் மாரடைப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன. பாடகர் நிகழ்ச்சியின் போது கூட மாலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

2) குறிப்பாக அரங்கத்தில் நிரம்பி வழிந்த கூட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கேகே இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் மொத்தமாக 3 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் அவரது நிகழ்ச்சி நடைபெற்ற போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகிறது.

கட்டுக்கடங்காத கூட்டத்தை களைப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது. இதனால் கேகே-வுக்கு அசவுகிரியம் ஏற்பட்டகாக தகவல் வெளியாகியுள்ளது.

3) அரங்கத்தில் ஏசி வேலை செய்யவில்லை. அரங்கின் ஊழியர் ஒருவர் ஏசி வேலை செய்வதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது, ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஆடிட்டோரியத்தின் வாயில்களை மூட முடியவில்லை.

4) நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சியின் வீடியோக்கள் எடுத்தனர் போது கிருஷ்ணகுமார் ஓய்வு எடுத்தார். முகத்தில் வழிந்த வியர்வையை டவலால் துடைத்துக் கொண்டிருந்தார். மேடை ஒளியின் கனமான கண் கூசுவதிலும் அவருக்கு சில சிக்கல்கள் இருந்து இருக்கலாம்.

5) நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

6) அவர் நிகழ்ச்சி இடத்தில் இருந்து வெளியேறும் வீடியோவில், அவரை சுற்றி அதிக கூட்டம் இருந்ததையும், கூட்டத்தில் ஒரு சிறிய வழியை உருவாக்கி வெளியே அழைத்துச் செல்லப்பட்டதையும் காட்டுகிறது.


7) காரில் அமர்ந்ததும் கார் ஏசி ஆன் செய்யப்பட்டிருந்ததால், தனக்கு குளிர்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.

8) அவர் ஓட்டலை அடைந்த சிறுதி நேரத்தில் சில துடிப்புகளுடன் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் கொல்கத்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

9) அவர் மயங்கி விழுவதற்கு முன்பு ஓட்டலில், ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்து அவர்ருடன் புகைப்படம் எடுத்தனர்.

10) கிருஷ்ணகுமார் உடல் மருத்துவமனையை அடைந்தபோது, இரத்தப்போக்கு இல்லை, காயத்தின் முக்கிய அறிகுறி எதுவும் இல்லை என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாரடைப்பால் இறந்த பாடகர் கே கே பொதுவாகவே ஊட்டச்சத்து நிறைந்த பேலன்ஸ்டு டயட் என்ற உணவு பழக்கத்தையும், தினசரி உடற்பயிற்சியையும் பின்பற்றி வந்தார். இருப்பினும் இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதுக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியவில்லை. மருத்துவர்கள் இறப்பிற்கான காரணத்தை பிரேத பரிசோதனை செய்து இன்று அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்