'மம்முட்டி, மோகன்லாலுக்கு பிறகு இவர்தான் சிறந்த நடிகர்' - நடிகை ஊர்வசி

நடிகை ஊர்வசி 'உள்ளொழுக்கு' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Update: 2024-09-17 05:59 GMT

சென்னை,

தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், நடிகை ஊர்வசி 'உள்ளொழுக்கு' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கிறிஸ்டோ டாமி இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கேரள சினிமாவில் மம்முட்டி, மோகன்லாலுக்கு பிறகு பகத் பாசில்தான் சிறந்த நடிகர் என்று ஊர்வசி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ' மம்முட்டி மற்றும் மோகன்லால் கேரள சினிமாவின் தூண்கள். அவர்கள் தங்கள் கடின ஊழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் சினிமாவில் உச்சத்தை தொட்டுவிட்டனர். அவர்களை குறைகூற எதுவும் இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும்போது அவர்களுக்கு பிறகு பகத் பாசிலை சிறந்த நடிகராக கூறலாம். விரைவில் அவர் இந்தியா முழுவதும் அறியப்படும் சிறந்த நடிகராக மாறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பகத் பாசிலுக்கு எந்த விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கும் திறமை இருக்கிறது,'என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்