முன்னாள் காதலர் துன்புறுத்தல்; குறிப்பு எழுதி விட்டு பிரபல நடிகை தற்கொலை

முன்னாள் காதலரால் துன்புறுத்தல் என குறிப்பு எழுதி வைத்து விட்டு பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-16 11:32 GMT



இந்தூர்,


பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக அறியப்பட்டவர் வைஷாலி தக்கார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த அவர், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷாலி தற்கொலை செய்த அறையில் குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அதில், சில காலம் வரை அதிக மனஅழுத்தத்தில் அவர் இருந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அதனை குறிப்பில் அவர் குறிப்பிட்டு உள்ளார். தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்தேன் என்றும் தெரிவித்து உள்ளார். ஆனால், முன்னாள் காதலரின் பெயர் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

கணவராக வர போகிறவர் டாக்டர் அபிநந்தன் சிங் என குறிப்பிட்டார். கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் அவர் என தெரிவித்து உள்ளார். குடும்பத்துடன் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எனினும், ஒரு மாதத்திற்கு பின்னர், அபிநந்தனை திருமணம் செய்யபோவதில்லை என தெரிவித்து உள்ளார். ஜூனில் நடக்க இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டது. சமூக ஊடகத்தில் இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி பற்றிய வீடியோவையும் அவர் நீக்கி விட்டார்.

வைஷாலி தக்கார், சசுரால் சிமர் கா என்ற தொடரில் அஞ்சலி பரத்வாஜ் ஆகவும், சூப்பர் சிஸ்டர்சில் ஷிவானி சர்மா ஆகவும், மன்மோகினி 2-ல் அனன்யா மிஷ்ரா ஆகவும் நடித்து புகழ் பெற்றவர். கடைசியாக ரக்சாபந்தன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கனக் சிங்சால் சிங் தாக்கூர் என்ற பெயரில் நடித்திருந்த நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்