வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்த துஷாரா விஜயன்

வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் துஷாரா டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

Update: 2024-08-06 10:34 GMT

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்படுவதாகவும் அதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை துஷாரா விஜயன் 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணி தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


அண்மையில் வெளியான ராயன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் துஷாரா விஜயன். வேட்டையன் திரைப்படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா.

துஷாரா வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் துஷாராவின் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டும் வகையில் அவர் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்