5 மொழிகளில் வரும் துல்கர் சல்மான் படம்
துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா' படத்தை சினிமாவில் அவரது 11 ஆண்டுகால வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் வருகிற ஓணம் பண்டிகையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த 'சீதா ராமம்' படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் 'கிங் ஆப் கோதா' படத்தை சினிமாவில் அவரது 11 ஆண்டுகால வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற ஓணம் பண்டிகையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி டைரக்டு செய்துள்ளார். படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது.