'டப்பிங்' குரல் விவகாரம்... படக்குழுவினருடன் சமந்தா மோதல்

‘டப்பிங்’ குரல் விவகாரத்தில் சமந்தாவுக்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தெலுங்கு பட உலகில் பேசுகின்றனர்.

Update: 2022-10-15 02:55 GMT

சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் திரைக்கு வரவில்லை. தாமதத்துக்கு சமந்தாவே காரணம் என்று படக்குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த படத்தின் டப்பிங்கை தொடங்கியதும் சமந்தா அமெரிக்கா சென்று இரண்டு மாதங்கள் தங்கிவிட்டார். இப்போது திரும்பி வந்துள்ள நிலையிலும் படத்தை வெளியிடுவதற்கான அறிகுறி இல்லை. சமந்தாவுக்கு பல படங்களில் பின்னணி பாடகி சின்மயி டப்பிங் குரல் கொடுத்து இருந்தார். ஆனால் நடிகையர் திலகம் படத்தின் தெலுங்கு பதிப்பான மகாநதியில் சமந்தாவே சொந்த குரலில் பேசினார். அவரது குரல் ரசிகர்களை கவரவில்லை. இப்போது யசோதா படத்திலும் தனது சொந்த குரலில் பேசி நடிக்க சமந்தா விரும்புகிறார். ஆனால் படக்குழுவினர் வேறு டப்பிங் கலைஞரை வைத்து குரல் கொடுக்க வற்புறுத்துகின்றனர். ஆனால் சமந்தா நானே குரல் கொடுப்பேன் என்று பிடிவாதம் செய்வதாக கூறப்படுகிறது. சமந்தா குரல் படத்துக்கு மைனசாக இருக்கும் என்று படக்குழுவினர் தயங்குகின்றனர். சமந்தாவுக்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தெலுங்கு பட உலகில் பேசுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்