என்னை திமிர் பிடித்தவன் என்பதா? - நடிகர் வடிவேலு

தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு வடிவேல் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து வடிவேலு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

Update: 2022-12-06 00:47 GMT

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலு பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். வடிவேல் திமிராக நடந்து கொள்வதாக அவ்வப்போது விமர்சனங்களும் கிளம்புகின்றன. ஏற்கனவே இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொண்ட பிறகு டைரக்டருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து வடிவேலு விலகியது சர்ச்சையானது. சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அதில் நடிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதுவும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் கிளம்ப காரணமாக அமைந்தன. சில மாதங்களுக்கு முன்பு தடை விலகிய நிலையில் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு வடிவேல் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து வடிவேலு அளித்துள்ள பேட்டியில்,'' என்னிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றால் அதில் நடிக்க மறுத்து விடுவேன். அப்படி நான் நடிக்க மறுத்த படங் களின் இயக்குனர்கள் என்னை பற்றி வெளியில் தவறாக பேசுகிறார்கள். வடிவேலுக்கு ரொம்ப திமிர் என்று வதந்தியை பரப்புகிறார்கள். பொறாமையால் இப்படி செய்கிறார்கள். எனது நடிப்பை மக்கள் ரசிக்க வேண்டும். அதற்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்