தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பதவியேற்றார் - இயக்குநர் பாக்யராஜ்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குநர் பாக்யராஜ் பதவியேற்றார்.
சென்னை,
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குநர் பாக்யராஜ் பதவியேற்றார்.
பதவியேற்ற பின் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது:- "அளவோடு பேசுபவர்களை தான் உலகம் பாராட்டும். அதனால் அளவோடு பேசுகிறேன். தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன், இந்த வெற்றி அனைவருக்கும் பொதுவானது.
தேர்தலில் வெற்றி பெற்றது பாடு இல்லை. இனிமேல் எதிரிகள் யார் என்று தெரிந்து அவர்களை கலையப்போவது தான் பெரியபாடு.
கதை ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதே எங்களது கடமை. எங்களுக்கு எதிர் அணி என்று எதுவும் இல்லை, எல்லாரும் ஒரே அணிதான்." இவ்வாறு அவர் பேசினார்.